Loading...
சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் பிளஸ் சந்தாதாரர்களுக்கு சில வீடியோ கேம்களை ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கி வருகிறது.
அதில் மே 4 முதல் மே 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் Battlefield V,Stranded Deep, Wreckfest போன்ற கேம்களை இலவசமாக வழங்குவதாக சோனி அறிவித்துள்ளது.
Loading...
இவற்றில் Battlefield V மற்றும் Stranded Deep ஆகிய கேம்கள் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்5 கேம் கன்சோல்களுக்கு வழங்கப்படுகிறது.
அதில் மற்றொரு கேமான Wreckfest பிஎஸ்5 கன்சோலுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. மேலும் சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் பிளஸ் சந்தாவை மாதம் ரூ. 499, மூன்று மாதங்களுக்கு ரூ. 1,199 மற்றும் 12 மாதங்களுக்கு ரூ. 2,999 கட்டணத்தில் வழங்கி வருகிறது.
Loading...